Friday, July 25, 2008

சிரிப்பாய் சிரிக்கும் கவிதைகள்

கவிதைகளை
எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!

*****

ஒவ்வொரு நாளும்
அலுவலகம் கிளம்பும்போதும்
மழையைப் போலவே என்னைத்தடுக்கிறாய்.
வெளியே மழையாகவும்
உள்ளே குடையாகவும்
ஒரே சமயத்தில் நீ.
உன் மீதான விருப்பமா தணியப் போகிறது?
இந்த மழையில் நனைந்தேதான்
இந்த வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது.!

*****

ஒரு பெண்ணைப் பார்க்கவென்று
சொல்லித்தான்
என்னை அழைத்துவந்தனர்,
உன்னைப்பார்ப்பேன் என்று
நான் நினைக்கவுமில்லை.!

*****

தீவிரமான அலுவலில் மூழ்கியிருக்கும் போதும்
உனக்கான ஒரு கவிதை
நெஞ்சில்
உருவாகிக்கொண்டேயிருக்கிறது.

.

22 comments:

சென்ஷி July 25, 2008 at 8:32 PM  

//கவிதைகளை எப்போதுமே ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து கவிதைகள் என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன!//

ஆஹா... கவுஜ... கவுஜ....

ஆட்டோ கவுந்ததை கூட இவ்வளவு கவுஜயா யோசிக்க முடியுதுங்க பாருங்க. அங்கதான் நீங்க ஸ்டூல்ல குந்திக்கினு கீறிங்க :))

மங்களூர் சிவா July 25, 2008 at 9:03 PM  

//
ஆட்டோ கவுந்ததை கூட இவ்வளவு கவுஜயா யோசிக்க முடியுதுங்க பாருங்க. அங்கதான் நீங்க ஸ்டூல்ல குந்திக்கினு கீறிங்க :))
//

ரிப்பீட்டு

மங்களூர் சிவா July 25, 2008 at 9:03 PM  

கவுஜை
கொடுமை

:)))

பரிசல்காரன் July 26, 2008 at 1:36 PM  

சரிங்க ஒத்துக்கிறேன்..

இது கவிதைதான்..

நீங்க கவிஞர்தான்!

Thamira July 26, 2008 at 9:13 PM  

//ஆட்டோ கவுந்ததை கூட இவ்வளவு கவுஜயா யோசிக்க முடியுதுங்க பாருங்க. அங்கதான் நீங்க ஸ்டூல்ல குந்திக்கினு கீறிங்க //

பாராட்டுக்கு நன்றி சென்ஷி!

நன்றி மங்களூர்! (இன்னா கால வாருறியா தல.. இன்னும் நெறய வெச்சிக்கிறேன். எடுத்து உட்டேன்னு வெச்சுக்கோ.. மெரிசலாயிடுவ, பரிசலை பாத்தில்ல..ஜாக்கிரத!)

ந‌ன்றி ப‌ரிச‌ல்!

Syam August 1, 2008 at 2:12 PM  

அவனா(ரா) நீயி(ங்க) :-)

Unknown August 5, 2008 at 12:02 PM  

வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com

ஜியா August 15, 2008 at 8:21 PM  

//ஆட்டோ கவுந்ததை கூட இவ்வளவு கவுஜயா யோசிக்க முடியுதுங்க பாருங்க. அங்கதான் நீங்க ஸ்டூல்ல குந்திக்கினு கீறிங்க :))
//

Repeatuuu... :))

நந்து f/o நிலா August 20, 2008 at 7:39 PM  

பொண்ணு பாத்த பின்னாடிதானே? கல்யானம் ஆனபின்னாடி கவிதைகள் கொலைவெறியாய் சிரிக்கும் பாருங்க...

MSK / Saravana August 20, 2008 at 8:49 PM  

// நந்து f/o நிலா said...
பொண்ணு பாத்த பின்னாடிதானே? கல்யானம் ஆனபின்னாடி கவிதைகள் கொலைவெறியாய் சிரிக்கும் பாருங்க...
//
ripeettei..
;)

தோழி August 20, 2008 at 9:24 PM  

உங்க கவிதை ரொம்பவே நல்லா இருக்குங்க. எங்க உக்காந்து யோசிச்சா இப்டியெல்லாம் கவிதை வரும்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா உங்களுக்கு பின்னால (அந்த பின்னால இல்லைங்க) கவிதை எழுத முயற்சி பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்குஞ்சாமியோவ்....

Thamira August 21, 2008 at 3:06 PM  

நன்றி ஷ்யாம்.!
ந‌ன்றி விவேக்.!
நன்றி ஜி.!

Thamira August 21, 2008 at 3:12 PM  

நன்றி நந்து.! (அதான் சிரிப்பா சிரிக்குதே..)
ந‌ன்றி குமார்.! (ஆமா, கல்யாணம் ஆயிடுச்சா.. அப்புறம் எப்புடி கவுஜயெல்லாம் எழுதுறீங்க.. அதுவும் நல்லா.!)
நன்றி தோழி.! (எப்பிடினு தனியா பதிவு போட்டுற‌லாமா?.. சரி சரி..போடலை அதுக்காகல்லாம் அடிக்க வரக்கூடாது)

Anonymous August 22, 2008 at 2:41 PM  

Super Selvakkumar!

ச.பிரேம்குமார் August 30, 2008 at 1:29 PM  

ஆகா தாமிரா, நீங்க கவிதையும் எழுதுவீங்கன்னு தெரியாதே....

அழகாய் அனுபவப்பூர்வமாய் இருக்கு கவிதைகள் :)

Ravishna September 2, 2008 at 10:23 AM  

**************************
கவிதைகளை
எப்போதுமே
ஒரு கீற்று புன்னகையுடன் தாண்டிப்போய்விடுவேன்.
உன்னைப் பெண் பார்த்துவிட்டு திரும்பியதிலிருந்து
கவிதைகள்
என்னைப்பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றன
!*********************************
நல்ல வரிகள் தான்...இன்னும் எழுதுங்கள் நீங்கள்.
கவிதைத் துவம் மேம்பட வாழ்த்துக்கள்.

--ரவிஷ்னா

Unknown September 2, 2008 at 3:24 PM  

நல்லாருக்கு :))

Divya September 4, 2008 at 9:25 PM  

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு தாமிரா!!!

ரமேஷ் வைத்யா September 18, 2008 at 3:53 PM  

என்னாச்சு தாமிரா? ஏன் இப்பிடி. கொஞ்சம் குறைச்சுக்கப் பாருங்க.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) October 8, 2008 at 6:20 PM  

அன்னே, அசத்தல் கவித, இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...

அன்புடன் அருணா December 1, 2008 at 7:25 PM  

//நந்து f/o நிலா said...
பொண்ணு பாத்த பின்னாடிதானே? கல்யானம் ஆனபின்னாடி கவிதைகள் கொலைவெறியாய் சிரிக்கும் பாருங்க...//

hahahahaha great fun!!
anbudan aruna

இரசிகை March 31, 2010 at 9:12 PM  

simply superb......

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP