Saturday, September 20, 2008

இரண்டாவது இரவு

திருமண‌மாகி பல நாட்களுக்குப்பிறகு
முதல் முறையாக நீ அழைத்த அந்த நாளை
நினைவிருக்கிறதா உனக்கு?
அன்றுதான் நிகழ்ந்தது அந்த இரண்டாவது இரவு.

*******

காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்.!

*******

எல்லா நேரங்களிலும்
ஒரு குழந்தையைப்போல
தெரிந்துகொள்வதற்காக‌
என்னையே சார்ந்து நிற்கிறாய்.
இர‌வுக‌ளில்நான் உன்னைச்சார்ந்து நிற்கிறேன்.

*******

என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்.!


43 comments:

விஜய் ஆனந்த் September 20, 2008 at 10:57 PM  

தலைவா...

உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!

கவிதைகள் அருமை!!!

அடிக்கடி தொடரவும்!!!

புதுகை.அப்துல்லா September 21, 2008 at 12:04 AM  

நல்ல ரசனையான ஆளுயா நீரு....
இன்னாமா கீதுபா ஃபீலிங்கு...
தூள் மாமு

Thamira September 21, 2008 at 8:24 PM  

நன்றி விஜய்.!
நன்றி புதுகை.!

நான் தமிழ்மணத்தில் ஏற்றியபோது 'தமிழ்மணம்' அப்டேட் ஆகாமல் சொதப்பிவிட்டது. நாளை இன்னொரு கவிதையை ஏத்திடவேண்டியதுதான்.. வேற வழி.?

Anonymous September 21, 2008 at 9:31 PM  

kavithai nalla irukku

//எல்லா நேரங்களிலும்
ஒரு குழந்தையைப்போல
தெரிந்துகொள்வதற்காக‌
என்னையே சார்ந்து நிற்கிறாய்.
இர‌வுக‌ளில்நான் உன்னைச்சார்ந்து நிற்கிறேன்.
//

ithu first class

appuram page load aaga romba neram aaguthu ... kavanikkavum

Anonymous September 21, 2008 at 10:27 PM  

Still eight toolbars...

Feelings?

So stopped drinks?

Regards
Ramesh

கார்க்கிபவா September 22, 2008 at 1:07 PM  

நல்லத்தானே இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்..

பரிசல்காரன் September 22, 2008 at 1:22 PM  

நன்றாக இருக்கிறது தாமிரா!

நீங்கள் ஒரு பலகலை வித்தகர்!

Anonymous September 22, 2008 at 7:27 PM  

தாமிரா,

//என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்.!//

வாழ்க்கைய நல்லா ரசிச்சு அனுபவிக்கிறீங்க போல.

நல்லா இருக்கு.

Cable சங்கர் September 22, 2008 at 11:59 PM  

சமீபத்தில் உங்களது கதை “அமிர்தவர்ஷினி” என்று நினைக்கிறேன் அது நீங்கள் எழுதியதுதானா? அப்படி என்றால் வாழ்த்துக்கள்..உங்கள் கவிதைகளும் நன்றாகவே இருக்கிறது.. மேலும் உங்கள் படைப்புகள் சிறக்க வாழ்த்துக்கள்

Thamira September 23, 2008 at 5:03 PM  

நன்றி அனானி.!
நன்றி ரமேஷ்.!
நன்றி கார்க்கி.!
நன்றி பரிசல்.! (நல்லாருக்கே.. அப்பிடினா என்னாது?)
நன்றி வேலன்.!
நன்றி கேபிள்.! (அது நானில்லை சங்கர்)

சந்தனமுல்லை September 23, 2008 at 5:45 PM  

//காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்.!//

செம!!!

//என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்.!//

செம..செம!!

கவிதை இயல்பாய் வருகிறது உங்களுக்கு, இல்லையா?!

டெம்ப்ளேட் லிங்க் மெயில் செய்திருக்கிறேன்!! ட்ரை செய்துப் பார்க்கவும்!! :-)

சந்தனமுல்லை September 23, 2008 at 5:46 PM  

//காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்.!//

செம!!!

//என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்.!//

செம..செம!!

கவிதை இயல்பாய் வருகிறது உங்களுக்கு, இல்லையா?!

டெம்ப்ளேட் லிங்க் மெயில் செய்திருக்கிறேன்!! ட்ரை செய்துப் பார்க்கவும்!! :-)

anujanya September 23, 2008 at 6:10 PM  

தாமிரா,

அழகான கவிதை.

//என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்//

ம்ம், நடக்கட்டும்.

அனுஜன்யா

மங்களூர் சிவா September 23, 2008 at 6:53 PM  

//
நான்க‌ல்ல‌து ஐந்து க‌விதைக‌ளை ஒரே ப‌திவாக‌ போட்டுவிடுகிறேன். ச‌ரிதானா? ஆனால் பின்னூட்ட‌ங்க‌ள் நான் எதிர்பார்த்த‌து போல‌ வ‌ர‌வில்லையென்றால் த‌னித்த‌னியாக‌ போட‌வும் த‌ய‌ங்க‌மாட்டேன் எனவும் எச்ச‌ரிக்கிறேன்.
//

ஸ்ஸப்ப்ப்பா வேணாம்பா :))))))))))))))

மங்களூர் சிவா September 23, 2008 at 6:54 PM  

கவிதைகள் அருமை!!!

அடிக்கடி தொடரவும்!!!

மங்களூர் சிவா September 23, 2008 at 6:54 PM  

தாமிரா!

நீங்கள் ஒரு பலகலை வித்தகர்!

Thamiz Priyan September 23, 2008 at 6:54 PM  

//என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்.!//
மிகவும் ரசித்தேன்.. நல்லா இருக்கு

மங்களூர் சிவா September 23, 2008 at 6:55 PM  

ம்ம், நடக்கட்டும்.

தமிழ் அமுதன் October 6, 2008 at 3:58 PM  

என‌க்கான
அழ‌கு, காத‌ல், காம‌ம்
இம்மூன்றையும்
உன் ஜ‌டையைப்போல‌ பின்னிக்கொண்டேயிருக்கிறாய்.!


அட! என்ன அழகு!

ஜியா October 30, 2008 at 1:05 AM  

Adutha kavithai thoguppu eppo??

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) November 2, 2008 at 7:22 PM  

கலக்கல் தலீவா,

அதுவும் இந்த முதல் கவிதை ச்சான்ஸே இல்ல!

அருமை....

pudugaithendral November 5, 2008 at 10:58 AM  

மிக ரசித்தேன். அருமையான தொகுப்பு.

Poornima Saravana kumar November 14, 2008 at 11:48 AM  

//எல்லா நேரங்களிலும்
ஒரு குழந்தையைப்போல
தெரிந்துகொள்வதற்காக‌
என்னையே சார்ந்து நிற்கிறாய்.//

வார்த்தைகள் கோர்வையாய் வந்திருக்கிறது..
வாழ்த்துக்கள்.

அக்னி பார்வை November 17, 2008 at 2:09 AM  

Please mail the photos taken on the blogers meet to this id

agnipaarvai@gmail.com

புதியவன் November 17, 2008 at 9:00 AM  

//எல்லா நேரங்களிலும்
ஒரு குழந்தையைப்போல
தெரிந்துகொள்வதற்காக‌
என்னையே சார்ந்து நிற்கிறாய்.
இர‌வுக‌ளில்நான் உன்னைச்சார்ந்து நிற்கிறேன்.//

அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

coolzkarthi November 19, 2008 at 4:31 PM  

உக்காந்து யோசிச்சிங்களோ ?நன்றாக இருந்தது...

ஹேமா December 4, 2008 at 4:36 PM  

வணக்கம் தாமிரா.தமிழ்பறவைப் பதிவின் பக்கமாக உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.குட்டிக் குட்டியாய் உங்கள் எண்ணங்களைப் பொறுக்கிச் சேகரித்த கவிதைகள் அருமை.
ரசித்தேன்.இன்னும் வருவேன்.

வனம் December 4, 2008 at 6:32 PM  

வணக்கம் தாமிரா

நல்லா இருக்கு கவிதை

வாழ்கையை இரசனையுடன் வாழ்கிறீர்கள்


நன்றி
இராஜராஜன்

பாண்டித்துரை December 17, 2008 at 1:13 PM  

அன்பின் தாமிரா

உங்களின் புலி மற்றும் சிங்கம் காடுகளில் வாழும் வாழ்க்கை பற்றிய கவிதையை நண்பர் கவிஞர் கருணாகரசு நவம்பர் 08 சிங்கப்பூர் கவிமாலை 102வது நிகழ்வில் பகிர்ந்துகொண்டார். உங்களின் வலைப்பக்கத்தில் அந்த கவிதை இருக்கிறதா?

மீள்பதிவு செய்யலாமே

எனக்காக

http://pandiidurai.wordpress.com

அ.மு.செய்யது December 26, 2008 at 11:15 AM  

//காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்.!//

அழகான வரிகள் தாமிரா...மிகவும் கவர்ந்தது.

நன்றி !!!!

RAMYA January 1, 2009 at 11:23 PM  

முதலில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

RAMYA January 1, 2009 at 11:27 PM  

//காலத்திலிருந்தும்
இந்தக் காற்றிலிருந்தும்
உனக்கான அழகை சேகரித்துக்கொண்டேயிருக்கிறாய்.!
//

ரொம்ப அழகா இயல்பா எழுதி இருக்கீங்க
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இத்துத்டன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

தேவன் மாயம் January 19, 2009 at 7:54 AM  

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

குடந்தை அன்புமணி January 21, 2009 at 5:22 PM  

கவிதைகள் நன்று. கூகிளில் சென்று தேடி கவிதைக்கேற்ற படங்கள் இணைக்கலாமே!

Sowmya January 31, 2009 at 11:16 AM  

Arputhamana kavithai thogupugal !!

NANDRI :)

Unknown February 5, 2009 at 2:14 PM  

:))

ஜீவா February 12, 2009 at 11:41 PM  

டிஸ்கி 2 : க‌விதைக்கு ந‌ல்ல கவிதைத்தனமா டெம்ளேட் யூஸ் பண்ண‌லாம்னு பாத்தா எப்பிடினு தெரிய‌மாட்டேங்குது////


ஹாய் தாமிரா ,கவிதைகள் நல்லா இருக்கு , அழகான templates க்கு இந்த வெப்சைட் www.btemplates.com பார்க்கவும் எனக்க தெரிந்தவரை நன்றாக உள்ளது

தோழமையுடன்
ஜீவா

Suresh March 3, 2009 at 5:29 PM  

அருமை!!!அருமை!!!அருமை!!!

Anonymous March 4, 2009 at 12:35 PM  

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Suresh March 9, 2009 at 9:47 AM  

nalla pathivu nanba, nanum pathivu potu ullan ungala mathiri makkalin asirvathathudan, padithu pidithal potunga vote :-)

ஆண்ட்ரு சுபாசு March 9, 2009 at 12:52 PM  

எல்லா நேரங்களிலும்
ஒரு குழந்தையைப்போல
தெரிந்துகொள்வதற்காக‌
என்னையே சார்ந்து நிற்கிறாய்.
இர‌வுக‌ளில்நான் உன்னைச்சார்ந்து நிற்கிறேன்//

மிக உண்மையான வரிகள் ...என்ன சொல்ல தாமிரா அவர்களே?பின்னுறீங்க ....பின்ன வைப்பது யாரோ?..ஹி ஹி ..

முரளிகண்ணன் March 9, 2009 at 3:25 PM  

அருமை தாமிரா

Kathir March 9, 2009 at 11:09 PM  

நல்லா இருந்ததுங்க.....

:))

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP