Wednesday, April 8, 2009

மற்றும் காமம்..

நேற்றிரவு
‘அத்தைமடி மெத்தையடி..’
பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தோம்
மாசமாக இருக்கும்
என் தங்கைக்கு
போன் செய்யத்துவங்கினாய் நீ.!

********

நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பு
மற்றும் காமம்.!

********

உன் அறிவும் திறனும் ஆளுமையும்
என்னை வியக்கச்செய்கிறது
இருப்பினும்
இரவுகளில்
ஒரு மாணவியைப்போல
இரந்து நிற்கிறாய்.!

********

ஒரு தக்கையைப்போல
காதலின் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டேயிருந்தேன்
நீ வந்தாய்,
ஒரு கல்லைப்போல
மூழ்கிப்போய்விட்டேன்.!

.

50 comments:

pudugaithendral April 8, 2009 at 9:02 AM  

கலக்கல்

ரொம்ப நல்லவன் April 8, 2009 at 10:34 AM  

ஒன்னுக்கு
கீழே
ஒன்னு
எழுதினா
அது
கவிதையா(இங்கே ?ஆ !ஆ)

சென்ஷி April 8, 2009 at 10:40 AM  

கலக்கல்ஸ் ஆஃப் ஆதி :-)))

கார்க்கிபவா April 8, 2009 at 11:02 AM  

ஆதி...

ஆ.....தீ

Raju April 8, 2009 at 11:08 AM  

\\உன் அறிவும் திறனும் ஆளுமையும்
என்னை வியக்கச்செய்கிறது
இருப்பினும்
இரவுகளில்
ஒரு மாணவியைப்போல
இரந்து நிற்கிறாய்.!\\

அருமை தாமிரா..சாரி..ஆதி அண்ணே

Thamira April 8, 2009 at 1:58 PM  

நன்றி தென்றல்.!
நன்றி ஜேசாட்.!(இப்பிடில்லாம் பொதுவுல கேட்டு மானத்த வாங்கக்கூடாது.. ஆமா சொல்லிப்புட்டேன்.)

நன்றி சென்ஷி.!
நன்றி கார்க்கி.!
நன்றி டக்ளஸ்.!

தராசு April 8, 2009 at 2:23 PM  

//நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பு
மற்றும் காமம்.!//

கலக்கல், வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா April 8, 2009 at 3:11 PM  

கவிஞர் ஆதி..

வாழ்த்துக்கள்.

ஆதவா April 9, 2009 at 11:40 AM  

நிலம்

நீர்

காற்று

வானம்

நெருப்பு

மற்றும்
காமம்.!

இக்கவிதையின் தீவிரத்தை எப்படி உணர்ந்து கொள்ளுகிறார்களோ தெரியாது. எனக்கு நன்கு தெரியும். ரொம்ப நல்லா இருக்குங்க...

அழகான கவிதைகள்!!!

புதியவன் April 9, 2009 at 2:56 PM  

//உன் அறிவும் திறனும் ஆளுமையும்
என்னை வியக்கச்செய்கிறது
இருப்பினும்
இரவுகளில்
ஒரு மாணவியைப்போல
இரந்து நிற்கிறாய்.!//

அருமை...

Chandru April 13, 2009 at 5:09 PM  

கவிதை சூப்பர்..

Suresh April 15, 2009 at 4:29 PM  

அருமையான பதிவு உங்க பாலோவர் ஆயாச்சு

Tech Shankar April 15, 2009 at 10:05 PM  

wonderful

SUREஷ்(பழனியிலிருந்து) April 16, 2009 at 8:21 AM  

காதல்....

காதல்....

Anonymous April 16, 2009 at 3:57 PM  

பஞ்சபூத கணக்கில் கால் பதிக்க வைத்து ஆறாம் நிலையில் காமம்..அத்தை மடி மெத்தயென அழைப்பு விடுக்க அவள் அழைப்பு தாய்மையின் பிரதிபலிப்பு....மாணவ பருவம் ஒவொரு கட்டத்திலும் ஒன்றிற்காக இரக்கிறோம்.....வள்ளூவன் கண்ட சுவையை வான் பேச உங்கள் வார்த்தை சுவையை இந்த வலைபூக்கள் பேசும் சுவையான சூட்சுமம்.....

Anonymous April 16, 2009 at 5:32 PM  

பஞ்சபூதம்களின் எண்ணிக்கையில் இதோ ஆறாம் இடத்தில் காமம் இடம்
பிடித்திருக்கிறது..அத்தை மடி மெத்தையடி பாடல் கேட்டு தொலைபேசியில் அழைத்தது தாய்மையின் வெளிப்பாடு....மடியும் வரை மாணவ பருவம் ஏதோ ஒரு நிலையில் தொடர்கதையாய்....அன்று முப்பால் சொன்ன வள்ளுவன் புகழ் வான் தொட இன்று உங்கள் புகழ் வலை பூக்களை தொடட்டும்....பட்டும் படாமல் பரவச கவிதை அழகு

விக்னேஷ்வரி April 21, 2009 at 10:56 AM  

ரொம்ப அழகான வரிகள்.

☼ வெயிலான் April 22, 2009 at 11:23 PM  

படங்களுடன் கவிதை படித்தேன். படமெல்லாம் எங்கே தாமிரா?

சகோதரன் ஜெகதீஸ்வரன் April 25, 2009 at 10:36 AM  

நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பு
மற்றும் காமம்.!

a new approach...
i like it.

நாடோடி இலக்கியன் April 26, 2009 at 1:49 PM  

//நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பு
மற்றும் காமம்.!//

அருமை..!!

Happy Smiles April 27, 2009 at 1:36 PM  

Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is "Improving self concept through blogging". In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Regards
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com

யாத்ரா May 11, 2009 at 10:41 PM  

கவிதைகள் பிடித்திருக்கிறது.

Unknown May 12, 2009 at 12:00 PM  

இரண்டாவது கவிதையும் கடைசி கவிதையும் அற்புதம்தாமிரா. மற்றவையும் கூட..

ஊர்சுற்றி May 17, 2009 at 6:28 PM  

காமக் கவி 'ஆதி'க்கு வாழ்த்துக்கள்...

:)))

சீரியஸா எடுத்துக்காதீங்க... ok.

இவன் June 12, 2009 at 8:44 AM  

கவிதைகள் அழகு தல

நட்புடன் ஜமால் June 25, 2009 at 11:54 AM  

மாசமாக இருக்கும்
என் தங்கைக்கு
போன் செய்யத்துவங்கினாய் நீ.!\\


தாய்மையாய் அண்ணி ...

Suresh June 29, 2009 at 6:40 PM  

உங்க கதை விகடனில் படித்து அசந்து போனேன் தலைவா.. சாப்ட்வேர் அழகியும் கிழிந்து மானத்துடன் சாந்தியும் .. அழகு .. உங்கள் கதை

சப்ராஸ் அபூ பக்கர் July 8, 2009 at 6:14 PM  

நன்றாக இருந்தது கற்பனைகள்....

தொடர வாழ்த்துக்கள்.....

அப்படியே என் வலைக்குள்ளும் வந்து போங்க.....

நேசமித்ரன் July 27, 2009 at 8:18 PM  

நல்ல பதிவு

எளிய சொற்களில் நிறைவான் கவிதைகள்

"ராஜா" August 14, 2009 at 5:27 PM  

உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா?
இல்ல நீங்க யாரையாது காதலிக்கிறீர்களா?
அனுபவம் எழுதியதுன்னு நெனைக்கிறேன்...

எல்லாமே சூப்பரு.....

Information August 30, 2009 at 2:17 PM  

நற்கவிதை

பரிசல்காரன் September 19, 2009 at 6:38 PM  

இரண்டாவது கவிதையை இன்னும் ரசித்துக் கொண்டிருக்கிறேன்...

கலகலப்ரியா October 25, 2009 at 1:01 PM  

beautiful..

Anonymous October 26, 2009 at 12:04 PM  

இன்னைக்குதான் படிக்கறேன். கலக்கல்ஸ்

பா.ராஜாராம் November 4, 2009 at 4:07 PM  

கலக்குறீங்க ஆதி!எல்லாமே ரொம்ப நேரத்துக்கு கட்டி போடுது.ஆளுமை!

மக்கள் தளபதி/Navanithan/ナパニ November 5, 2009 at 1:35 AM  

//இரவுகளில்
ஒரு மாணவியைப்போல
இரந்து நிற்கிறாய்.!//

அதச்சொல்லுங்க மொதல்ல........

உங்கள் ராட் மாதவ் November 23, 2009 at 11:40 AM  

நல் வணக்கங்கள்...

“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...

மேலதிக விபரங்களுக்கு
http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

புகழன் November 23, 2009 at 6:38 PM  

//நிலம்
நீர்
காற்று
வானம்
நெருப்பு
மற்றும் காமம்.!

//
ரெம்ப அழகான வரிகள்.
பஞ்ச பூதங்களையும் அடக்கியாளும் ஆறாவது சக்தி

vasu balaji November 27, 2009 at 11:23 AM  

அருமையான கவிதைகள் சார்.

vasu balaji November 27, 2009 at 11:24 AM  

அருமையான கவிதைகள் சார்.

நினைவுகளுடன் -நிகே- December 18, 2009 at 4:06 PM  

ரொம்ப நல்லா இருக்கு....
வாழ்த்துக்கள்.

கமலேஷ் January 7, 2010 at 8:03 PM  

எல்லா கவிதைகளும் மிகவும் அழகாக இருக்கிறது....வாழ்த்துக்கள்...

Ahamed irshad March 31, 2010 at 7:17 PM  

அசத்தல்மா.....

இரசிகை March 31, 2010 at 9:02 PM  

i...last one clas.........:)

Unknown March 31, 2010 at 9:12 PM  

அடுத்த பதிவு எப்போங்க ஆதி...???

www.bogy.in April 14, 2010 at 2:28 PM  

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

பனித்துளி சங்கர் April 17, 2010 at 1:36 PM  

///உன் அறிவும் திறனும் ஆளுமையும்
என்னை வியக்கச்செய்கிறது
இருப்பினும்
இரவுகளில்
ஒரு மாணவியைப்போல
இரந்து நிற்கிறாய்.!////


மிகவும் அழகான சிந்தனை !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .


.

Anonymous July 20, 2010 at 8:08 AM  

முதல் கவிதை....அபாரம்.டச்சிங்

vinu August 14, 2010 at 6:53 PM  

pattttaaaaaaaaaaaasu
this is my first visit and comment on your
blog
brother.

vinu August 14, 2010 at 7:41 PM  

aaaaram pootham arumai

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP