Saturday, March 14, 2009

வெட்கத்தால் செய்யப்பட்ட அழகு!

தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொள்
என்றேன்
சிணுங்கினாய்
தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு.!

********

ரயிலடியில்
மழைபெய்தாலே போதும்..
உன் ஞாபகத்தில்
என் நினைவுகள்
‘சொத சொத’வென நனைந்துவிடுகின்றன.

********

உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.

********

என் காதல்
திசைமறந்த ஒரு வண்டைப்போல
உன்னையே சுற்றிச் சுற்றி வருகிறது.

.

19 comments:

புதியவன் March 14, 2009 at 9:05 AM  

//தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு//

தேவதைகளுக்கு மொழி தேவையில்லை தான் போலும்...மிகவும் ரசித்தேன்...

புதியவன் March 14, 2009 at 9:06 AM  

//உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.//

கரும்பான...குறும்பான... கவிதை...

அத்திரி March 14, 2009 at 10:11 AM  

//நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது//

!!!!!!!!!!!!!!!!!!!!

கார்த்திகைப் பாண்டியன் March 14, 2009 at 10:22 AM  

//உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.//

காதல் வழியும் கவிதைகள்.. நல்லா இருக்கு நண்பா..

முரளிகண்ணன் March 14, 2009 at 11:02 AM  

காதல் பொங்கி வழிகிறது. எங்களையும் நனைக்கிறது

anujanya March 14, 2009 at 11:09 AM  

இந்த வலைப்பூ காதல் கவிதைகளுக்கு மட்டுமே என்று நினைக்கிறேன். ஒரு வாழ்த்தும் சொல்லிக் கொள்கிறேன்.

அனுஜன்யா

ஆதவா March 14, 2009 at 5:23 PM  

தலைப்பின் தேர்வு மிக அருமை!!

ஒவ்வொரு குறுங்கவிதைகளிலும் காதலை நன்கு பிழிந்து பொழிந்திருக்கிறீர்கள்.. அந்த பொழிவுகள் சொட்டுச்சொட்டாக எழுத்துக்களாக வந்து அமர்ந்திருக்கின்றன.

தொடர்ந்து எழுதுங்கள் தாமிரா(எ)ஆதிமூலகிருஷ்ணன்..

வாழ்த்துகள்

ஷைலஜா March 14, 2009 at 5:46 PM  

\\உன் வெட்கத்தையெல்லாம்
கூட்டிச் சேர்த்து செய்யப்பட்டதுதான்
உன் அழகு!
நீ வெட்கப்படுவதற்காகவே
நான் அடிக்கடி
ஏதாவது செய்யவேண்டியதாயிருக்கிறது.\\

********>>>>>>>

ரசித்தேன்!
ஷைலஜா

மங்களூர் சிவா March 14, 2009 at 5:59 PM  

very nice!

priyamudanprabu March 14, 2009 at 11:54 PM  

////
தமிழ் எழுதப் படிக்க கற்றுக்கொள்
என்றேன்
சிணுங்கினாய்
தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு.!
///

தமிழ் தெரியாதா!!1
நல்லாயீருக்கு

Unknown March 16, 2009 at 5:29 PM  

அனைத்தும் அழகு :))

Anonymous March 16, 2009 at 6:30 PM  

ஒவ்வொன்றிலும் காதல் வழிகிறது!

வாழ்த்துக்கள் தோழரே!

Thamira March 16, 2009 at 7:51 PM  

நன்றி புதியவன்.!
நன்றி அத்திரி.!
நன்றி பாண்டியன்.!
நன்றி முரளி.!
நன்றி அனுஜன்யா.!
நன்றி ஆதவா.!
நன்றி ஷைலஜா.!
நன்றி மங்களூர்.!
நன்றி பிரபு.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி ஷீ-நிசி.!

உயிரோடை March 17, 2009 at 2:02 PM  

அட‌ என்ன‌ங்க‌ நீங்க‌ த‌பூ ச‌ங்க‌ர் விட‌ அதிக‌மா காத‌லிக்கிறீங்க‌

☼ வெயிலான் March 17, 2009 at 5:28 PM  

இந்த வலைத்தளம் எப்போருந்து? சூப்பரா இருக்கு கவிஞரே!

தமிழன்-கறுப்பி... March 22, 2009 at 10:58 PM  

25

படிச்சேன், படிச்சேன், கொஞ்சநேரம் படிச்சுக்கிட்டே இருந்தேன் நான் காதலை இப்படி எழுதி எத்தனை நாளாகிவிட்டது...

சகோதரன் ஜெகதீஸ்வரன் March 29, 2009 at 8:38 PM  

காதல் காதல் காதல்
காதலன்றி வேறில்லை உங்கள் அன்பு கவிதையில்.
அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com

ISR Selvakumar October 27, 2009 at 5:38 PM  

சிணுங்கினாய்
தேவதைகள் தங்களை
வெளிப்படுத்திக் கொள்ள
மொழிகள்
தேவையில்லை என்று தோன்றியது எனக்கு.!

இந்த வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இரசிகை March 31, 2010 at 9:06 PM  

aththanaiyum kaathaal.........!

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP