Tuesday, March 10, 2009

காதலின் பக்கவிளைவுகள்

அட்டைகள் தீர்ந்துபோன
எடைகாட்டும் எந்திரத்தில்
ஏறி நிற்கிறாள் அந்தச்சிறுமி.
நான் உன்னைக் காதலிக்கிறேன்.

********
ஏற வேண்டிய பேருந்தை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தவறவிடுகிறேன்
நேரங்கெட்ட நேரத்தில்
மாலை ஐந்து மணிக்கு தூக்கம் வருகிறது
விழித்தால்
விடியற்காலையா அந்திமாலையா குழப்பம் வருகிறது
பேசுபவர்களிடம்
காதுகளை விடுத்து கண்களைத் தருகிறேன்
காதலின் பக்கவிளைவுகளுக்கான பட்டியல்
நீண்டுகொண்டேயிருக்கிறது.

********
பளிங்கு போன்ற நீரோடை
பாலைப் போன்ற நீர்வீழ்ச்சி
பழமரங்கள் தேனடைகள்
பச்சைப்பசேலென்ற வனம்
தென்றலுடன் கொஞ்சம் சாரல்
உன்னுடனான எனது இரவு.

********
நெருங்கி வந்து
என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்
நீ விழித்திருக்கிறாய்
என்பது உறக்கத்திலும் புரிகிறது
காதல் எளிதான வரையறைக்குள் சிக்கிவிடும்
சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.

.

23 comments:

குசும்பன் March 10, 2009 at 9:58 AM  

இது எப்பொழுதில் இருந்து !

அத்திரி March 10, 2009 at 9:58 AM  

மலரும் நினைவுகளா...........

முரளிகண்ணன் March 10, 2009 at 9:59 AM  

அசத்தல் தாமிரா

குசும்பன் March 10, 2009 at 9:59 AM  

//நெருங்கி வந்து
என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்//

அடுத்த முறை வரும் பொழுது Axe ஸ்ப்ரே கையோடு கொண்டு வந்து இருப்பாங்களே!!!

குசும்பன் March 10, 2009 at 10:02 AM  

கவிஞர் டாமிரா, ஒரு பக்கமா பார்த்தா வைரமுத்து போல தெரிகிறீர்கள், ஒரு பக்கமா பார்த்தா பா.விஜய் போல தெரிகிறீர்கள், இன்னொரு பக்கமாக பார்த்தால் நா.முத்துகுமார் போல தெரிகிறீர்கள் இப்படி பல உருவங்களை உங்களுக்கு அடக்கி வைத்து இருப்பது எப்படி டாமிரா?

நாதஸ் March 10, 2009 at 10:10 AM  

அவ்வ்வ்வ்வ்
ஒன்னியும் புரியல :(

anujanya March 10, 2009 at 10:39 AM  

வாவ், அட்டகாசம். முதல் இரண்டு மிகப் பிடித்தது. இதைத் தொடரவும்.

அனுஜன்யா

Unknown March 10, 2009 at 10:48 AM  

//ஏற வேண்டிய பேருந்தை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தவறவிடுகிறேன்
நேரங்கெட்ட நேரத்தில்
மாலை ஐந்து மணிக்கு தூக்கம் வருகிறது
விழித்தால்
விடியற்காலையா அந்திமாலையா குழப்பம் வருகிறது
பேசுபவர்களிடம்
காதுகளை விடுத்து கண்களைத் தருகிறேன்
காதலின் பக்கவிளைவுகளுக்கான பட்டியல்
நீண்டுகொண்டேயிருக்கிறது.//

மிக மிக அழகு அண்ணா :))

மோனி March 10, 2009 at 10:52 AM  

___ஏற வேண்டிய பேருந்தை
வேடிக்கைப் பார்த்துக்கொண்டே தவறவிடுகிறேன்
நேரங்கெட்ட நேரத்தில்
மாலை ஐந்து மணிக்கு தூக்கம் வருகிறது
விழித்தால்
விடியற்காலையா அந்திமாலையா குழப்பம் வருகிறது
பேசுபவர்களிடம்
காதுகளை விடுத்து கண்களைத் தருகிறேன்
காதலின் பக்கவிளைவுகளுக்கான பட்டியல்
நீண்டுகொண்டேயிருக்கிறது.___

மிகவும் இரசித்தேன் ...
அனுபவம்
அனுபவம் ...
தொடருங்கள் உங்கள் பயணத்தை ...
___மோனி

narsim March 10, 2009 at 11:39 AM  

//உன்னுடனான எனது இரவு.//

கலக்கல்

புதியவன் March 10, 2009 at 1:42 PM  

//நெருங்கி வந்து
என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்
நீ விழித்திருக்கிறாய்
என்பது உறக்கத்திலும் புரிகிறது
காதல் எளிதான வரையறைக்குள் சிக்கிவிடும்
சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.//

வெகு அழகு...மிகவும் ரசித்தேன் காதலின் பக்கவிளைவுகளை...

சிவக்குமரன் March 10, 2009 at 2:10 PM  

ஏதோ சொல்ல வரீங்கன்னு புரியுது. என்னன்னுதான் புரியல...

Thamira March 10, 2009 at 3:00 PM  

நன்றி குசும்பன்.! (முதலில் இதுதான் தல.. அப்புறம்தான் தாமிரா புலம்பல்கள் ஆரம்பிச்சேன்.)

நன்றி அத்திரி.!
நன்றி முரளிகண்ணன்.!
நன்றி நாதாஸ்.!

நன்றி அனுஜன்யா.! (அப்பிடிங்கிறீங்க..)

நன்றி ஸ்ரீமதி.!
நன்றி மோனி.!
நன்றி நர்சிம்.!
நன்றி புதியவன்.!
நன்றி சிவக்குமரன்.! (புர்லன்னா லூஸ்ல விடுங்க..)

அமிர்தவர்ஷினி அம்மா March 11, 2009 at 11:07 AM  

நெருங்கி வந்து
என் கழுத்தோடு முகம் புதைக்கிறாய்
நீ விழித்திருக்கிறாய்
என்பது உறக்கத்திலும் புரிகிறது
காதல் எளிதான வரையறைக்குள் சிக்கிவிடும்
சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று.//

அழகு

பளிங்கு போன்ற நீரோடை
பாலைப் போன்ற நீர்வீழ்ச்சி
பழமரங்கள் தேனடைகள்
பச்சைப்பசேலென்ற வனம்
தென்றலுடன் கொஞ்சம் சாரல்
உன்னுடனான எனது இரவு. //

ரசனை

மாலை ஐந்து மணிக்கு தூக்கம் வருகிறது
விழித்தால்
விடியற்காலையா அந்திமாலையா குழப்பம் வருகிறது //

எங்க சார், ஆபிஸ்ல இருக்கும்போதா?
தூக்கம் வருது. அந்த டைம்ல மீட்டிங்க் வெக்க சொல்லாதீங்க் சார்.

Anonymous March 11, 2009 at 2:40 PM  

தாமிராவின் இன்னொரு பரிமாணம். கலக்கல்.

Anonymous March 11, 2009 at 3:13 PM  

Eyes are filled with water after reading your... so touching...

Thamira March 11, 2009 at 9:39 PM  

நன்றி அமித்து அம்மா.!
நன்றி நந்தா.!
நன்றி அனானி.!

Anonymous March 12, 2009 at 7:22 AM  

மாலை ஐந்து மணிக்கு தூக்கம் வருகிறது
விழித்தால்
விடியற்காலையா அந்திமாலையா குழப்பம் வருகிறது///

நிதர்சன வரிகள்! வாழ்த்துக்கள்!

Suresh Kumar March 12, 2009 at 11:17 AM  

அருமையான கவிதை வரிகள்

ஸ்ரீதர்ரங்கராஜ் March 12, 2009 at 7:25 PM  

//அட்டைகள் தீர்ந்துபோன
எடைகாட்டும் எந்திரத்தில்
ஏறி நிற்கிறாள் அந்தச்சிறுமி.
நான் உன்னைக் காதலிக்கிறேன்.//

இது மட்டும் புரியல.

Anonymous March 13, 2009 at 1:01 PM  

என்ன தலைவா? பதிவின் தலைப்பை மாற்றி விட்டீர்களா? ஆதி நாராயணா இது தான் உங்கள் பெயரா? அப்புறம் கவிதை ரொம்ப நன்னாயிருக்கு.

சந்தனமுல்லை March 13, 2009 at 8:41 PM  

டெம்ப்ளேட்-இன்னும் மாற்றங்கள் செய்யலாம்..ஹெட்டர் நல்லாருக்கு..

Thamira March 13, 2009 at 9:23 PM  

நன்றி ஷீ-நிசி.! (வித்தியாசமான பெயர்)
நன்றி சுரேஷ்.!
நன்றி ஸ்ரீதர்.! (கவிதைக்கெல்லாம் விளக்கம் சொன்னால் யாராவது அடிக்க வரப்போறாங்க.. இருந்தாலும் காதக்கொடுங்க.. உங்களுக்கு மட்டும்சொல்றேன். ஒருதலைக்காதலில் (பொருந்தா?) சிக்கிய தலைவன் ரயில் நிலையத்தில்.. காதலுக்கு பெஸ்ட் பிளேஸ் இதுதான் தெரியுமில்லையா? காத்துக்கொண்டிருக்கிறான். ஒரு சிறுமி எடைபார்க்கும் எந்திரத்தில் ஏறி காசைப்போடுகிறாள். அவளுக்கு எந்த பலனும் இருக்கப்போவதில்லை.. அதைப்போலவே நம் காதலும் ஆகிவிடக்கூடிய வாய்ப்பிருப்பதை உணர்கிறான்.. ஸ்ஸ்ஸு..ஸப்பா..)

நன்றி ஆனந்த்.!
நன்றி முல்லை.! (ஒரு உதவி செய்யாதீங்க.. குறை சொல்ல மட்டும் முத ஆளா வந்துடுங்க.. ஹிஹி..சும்மாச்சுக்கும்..)

  © Blogger template 'Soft' by Ourblogtemplates.com 2008

Back to TOP